search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபிருந்தா
    X
    ராஜபிருந்தா

    திருவாடானை அருகே டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற அரசு பெண் ஊழியர்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு பெண் ஊழியராக பணியாற்றி வந்த ராஜபிருந்தா சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் டி.எஸ்.பி.யாக தேர்வாகி உள்ளார்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவடிமதியூர் என்று அழைக்கப்படும் கொத்தார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வாசுகி தம்பதியருக்கு 2 மகள்கள்.

    ராஜேந்திரன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மகள் ராஜபிருந்தா (வயது26). இவர் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணி தேர்வான டி.என்.பி.எஸ்.சி.யில் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணி புரிந்து வந்தார். அப்போது திருமண ஏற்பாடு நடை பெற்றது.

    தற்போது திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு எழுதினார். அதில் டி.எஸ்.பி.யாக தேர்வாகி உள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ராஜபிருந்தாவை பாராட்டினர்.

    Next Story
    ×