search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    மதுரையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    மதுரையில் ரெயில்வே தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை சி.ஐ.டி.யூ. தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் “ரெயில்வே தனியார் மயமாக்குவதை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொதுத்துறை சொத்துக்களை கார்ப்பரேட்டு களிடம் தாரைவார்க்கும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்றும், ரெயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளர் நலச்சட்ட திருத்தத்தை கண்டித்தும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிற் சங்கங்கள் போராடி பெற்ற 8 மணி நேர வேலை என்பதை மாற்றி ஒன்பது மணி நேரம் பணி நேரம் உயர்வு என்ற திட்டத்தை அமல்படுத்த கூடாது.

    படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று பொய் பிரசாரத்தை செய்து ஆட்சியைப் பிடித்த மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாளை (8-ந் தேதி) நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மதுரை மேற்கு நுழைவு வாயிலில் டி.ஆர்.இ.யு. மதுரை கோட்ட உதவி செயலாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கோட்ட தலைவர் பவுலின், கோட்ட செயலாளர் சங்கர நாராய ணன் தோழமை சங்க நிர்வாகிகள் கார்த்திக், சிவக்குமார், ராஜசேகரன், பிரபு டேவிட் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    டி.ஆர்.இ.யு. ஓபன்லைன் செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×