search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெ.அன்பழகன் எம்எல்ஏ
    X
    ஜெ.அன்பழகன் எம்எல்ஏ

    சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் பங்கேற்க தடை

    தமிழக சட்டசபையில் இன்று ஆளுநரின் உரையை கிழித்து எறிந்த திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின்போது திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கும் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரைப் பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.

    அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘அமைச்சரைப் பார்த்து எங்கள் உறுப்பினர் அன்பகழன் பேசியது தவறுதான், ஆனால், அதே வார்த்தையை உள்ளாட்சித்துறை அமைச்சரும் பேசியிருக்கிறார். இதற்கு சபாநாயகர் என்ன பதில் அளிப்பார்? ‘’ என கேள்வி எழுப்பினார். 

    ‘ஜெ.அன்பழகன் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்ததால் மறப்போம், மன்னிப்போம்’ என ஓ.பி.எஸ். பேசினார். எனவே, இந்த விவகாரத்தில் ஜெ.அன்பழகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. எச்சரிக்கை மட்டும் செய்தார்.

    சபாநாயகர் தனபால்

    அதேசமயம், ஆளுநரின் உரையை கிழித்து சபாநாயகரின் இருக்கை முன் வீசியதால், ஜெ.அன்பழகன் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் கூறினார். 

    இதனையடுத்து அவையில் இருந்து வெளியேறினார் ஜெ.அன்பழகன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், தான் பேசும்போது அமைச்சர்களும் சபாநாயகரும் அடிக்கடி குறுக்கிட்டதாக குற்றம்சாட்டினார்.

    ‘தமிழகம் எதில் முதலிடம் என கேட்டதற்கு முதல்வர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை’ என்றார் அன்பழகன்.
    Next Story
    ×