search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும்

    பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பயனப்படி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.

    ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    கோவை மாவட்ட தமிழ்நாடு 108 அவரச ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட தலைவர் பொய்யாமொழி தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்க வேண்டும்.ஒரு மாவட்டத்தில் வேலை செய்யும் ஊழியரை மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றக்கூடாது. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு கழிவறையுடன் கூடிய ஓய்வறை கட்டிதர வேண்டும்.

    கோவை மாவட்ட மருத்துவ கல்லூரியில் நோயாளியை அவசர பிரிவில் சேர்த்து விட்டு வரும் வரை வாகனம் நிறுத்த இடமில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. பண்டிகை நாட்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பின்னர் விடுப்பு எடுக்கும் முறை எல்லா மாவட்டத்திலும் உள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் அந்த விடுமுறை தர மறுக்கின்றனர். இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×