search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சியில் இன்று 5-வது நாளாக தொடர்கிறது- விவசாயிகள் தூக்கு மாட்டி போராட்டம்

    திருச்சியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் தூக்கு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் கடந்த 2-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகிறார்கள். சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலும் மாநகர தலைவர் மேகராஜன் முன்னிலையிலும் இந்த போராட்டம் நடக்கிறது.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாதது 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மேட்டூர், அய்யாறு-உப்பாறு மற்றும் காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றாதது, கோதாவரி -காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் ஒதுக்காதது, ஊட்டி, முதுமலைக்காட்டில் பெய்யும் மலையை கர்நாடகாவிற்கு செல்லாமல் மாயாறு வழியாக பவானி அணைக்கு திருப்பிவிட வேண்டும், வெங்காயத்தை கிலோ ரூ.50 விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க 3 முறை முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தினமும் உடலில் நாமம், போட்டும், ரத்தக்கண்ணீர் வடித்தும், நேற்று மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளை வைத்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற 20 விவசாயிகள் இன்று கழுத்தில் கயிறுகளை கட்டி தொங்கவிட்டு தூக்கில் தொங்குவது போல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமைச்சர் , அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த போராட்டம் தொடர்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
    Next Story
    ×