search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூர் அருகே கஞ்சாவுடன் சிக்கிய 6 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

    திருப்பூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய 6 சிறுவர்களை போலீசார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 6 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.

    இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தனர்.ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 6 பேரும் ரூ.6 ஆயிரத்தை எடுத்து கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு கஞ்சா விற்பவர்களிடம் கஞ்சா வாங்கி கொண்டு இங்கு வந்துள்ளனர். பிடிபட்ட 6 சிறுவர்களில் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், மற்றவர்கள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×