search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிடிபட்ட பாம்பை பெண் போலீஸ் ஒருவர் கையில் பிடித்து வைத்திருந்த காட்சி.
    X
    பிடிபட்ட பாம்பை பெண் போலீஸ் ஒருவர் கையில் பிடித்து வைத்திருந்த காட்சி.

    திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த பாம்பு

    திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த 4 அடி நீள சாரை பாம்பை வன ஊழியர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்குகள் எண்ணப்படுகிறது.

    இதற்காக பள்ளி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் நுழைவுவாசல் முன்புறம் உள்ள செடிகளுக்குள் பாம்பு ஒன்று சென்றதை அங்கிருந்த போலீசார் கண்டனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர் வன சரக அதிகாரி மகேஷ் மேற்பார்வையில் சரக பணியாளர் சிவமணி மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது 4 அடி நீள சாரை பாம்பு ஆகும்.

    பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீசார் அந்த பாம்பை செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த பாம்பை வன ஊழியர்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று வன பகுதியில் விட்டனர்.
    Next Story
    ×