search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    கலெக்டர் சந்தீப் நந்தூரி

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் அடுத்த மாதத்தில் 4 நாட்கள் நடக்கிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: -

    வாக்காளர் பட்டியலில் 1.1.2020 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது.

    1.1.2020 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்களை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், இதற்கென நியமிக்கப்பட்டு உள்ள நியமன அலுவலரிடம் இருந்து பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்படி அலுவலரிடம் அளிக்க வேண்டும். இதற்கான சிறப்பு முகாம்கள் 4-ந் தேதி (சனிக்கிழமை), 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொது மக்கள் தகவல்களை பெறவும் இடர்பாடுகள் இருப்பின் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 04611950ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி தாசில்தார், உதவி கலெக்டர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம்.

    பொதுமக்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மற்றும் சிறப்பு முகாம் வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×