search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    2022-க்குள் அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயம்- தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

    2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் பாதைகளும் முற்றிலும் மின்மயமாக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் சென்னை முதல் மதுரை வரையிலான ரெயில் பாதை முற்றிலும் இருவழிமயமாக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் தொடர்ந்து நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு, 2021ம் ஆண்டுக்குள் முற்றிலும் இருவழிப்பாதையாக்கப்படும்.

    இது போலவே தமிழகத்தில் ரெயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அவை 2022ம் ஆண்டுக்குள் முடிவடைந்து அனைத்து ரெயில் பாதைகளும் முற்றிலும் மின்மயமாக்கப்படும்.

    அனைத்து ஆளில்லா ரெயில்வே கேட்டுகளும் அகற்றப்பட்டு விட்டன. அவற்றுக்கு பதிலாக சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டும், சில மூடப்பட்டும் உள்ளன.

    பாதுகாப்பு கருதி 2022ம் ஆண்டுக்குள் தெற்கு ரெயில்வேயில் ஆள் உள்ள ரெயில்வே கேட்டுகளும் அகற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக பொதுமக்களை பாதிக்காத வகையில் பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் ரெயில்பாதையில் காலியாக உள்ள ரெயில்வே கேட் கீப்பர்கள் பணியிடங்கள் 6 மாத காலத்துக்குள் நிரப்பப்படும். மேலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் ரெயில்களில் எளிதாக ஏறும் வகையில் நடைமேடைகள் உயரம் அதிகரிக்கப்படும் என்றார்.
    Next Story
    ×