search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்லெட்
    X
    ஆம்லெட்

    அதிகரிக்கும் வெங்காய விலை - ராமநாதபுரத்தில் ஆம்லெட் விலை உயர்வு

    வெங்காயம் விலை உயர்வு உச்சத்தை தொட்ட நிலையில் ராமநாதபுரத்தில் வெங்காயம் சார்ந்து தயாரிக்கப்படும் ஆம்லெட்டின் விலை எகிறியுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தினமும் 6 டன் வெங்காயம் தேவைப்படும் நிலையில், தற்போது அதில் பாதியாக தேவை குறைந்துள்ளது.

    2 வாரங்களுக்கு முன்பு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் தற்போது சிறிய நாட்டு வெங்காயம் கிலோ 160 முதல் 180 ரூபாய் வரையிலும், அளவில் சிறியவை 140 முதல் 155 வரையிலும், பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் 100 முதல் 140 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.

    ராமநாதபுரத்தில் சாதாரண உணவகங்களில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆம்லெட் தற்போது 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்வால் ஆம்லெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கடைகளில் எழுதி வைத்துள்ளனர். சில கடைகளில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதே போல் வெங்காய தோசையின் விலையும் உயர்ந்துள்ளது. பிரியாணி சாப்பிடுவோருக்கு தயிர் பச்சடிக்கு பதில் கேரட், வெள்ளரிக்காய் கலந்த பச்சடி வழங்கப்படுகிறது.

    விலை ஏற்றத்தால் வெங்காயம் வாங்குவதை மக்களும், ஓட்டல் உரிமையாளர்களும் குறைத்துள்ளனர்.இருப்பினும் வீடுகளில் வெங்காய பயன்பாடு குறையவில்லை.

    இதுகுறித்து வண்டிக்காரத்தெரு கமலா கூறுகையில், வீடுகளில் வெங்காயம் சேர்க்காமல் உணவு தயாரிப்பது என்பது நடக்காத காரியம்.

    வழக்கமாக ஒரு கிலோ உபயோகித்த நாங்கள் தற்சமயம் அரைகிலோ அளவில் பயன்படுத்தி வருகிறோம். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×