search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருபுவனை அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை

    திருபுவனை அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே சன்னியாசிக்குப்பம்- பிடாரிபட்டுபேட் புதுத்தெருவை சேர்ந்தவர் பாபு. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜீவா என்ற மோனிஷா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் இளம்பரிதி என்ற ஆண் குழந்தை உள்ளது. தினமும் பாபு கல்லூரிக்கு ரெயிலில் சென்று வீடு திரும்புவார்.

    பாபுவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் காலை பாபு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். காலை 9 மணியளவில்  மோனிஷா வீட்டில் திடீரென மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து மோனிஷாவின் சகோதரர் ராஜ்குமார் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மோனிஷா தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோனிஷாவுக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் உதவி தாசில்தார் செந்தில்குமாரும்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  
    Next Story
    ×