என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி லாரி மோதி பலி
Byமாலை மலர்3 Dec 2019 10:32 AM GMT (Updated: 3 Dec 2019 10:32 AM GMT)
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி லாரி மோதியதில் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை:
பழனி அடிவாரத்தைச் சேர்ந்த வீரணன் மகன் பிரகாஷ் (வயது 26). இவர்மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே பிரகாஷை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் பழனி அடிவார பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடந்த மாதம் 5-ந் தேதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷை கைது செய்தனர்.
அப்போது பிரகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடினார். அவர் நெடுஞ்சாலையில் ஓடி தப்பிக்க முயன்றபோது அந்த வழியாக வந்த லாரி பிரகாஷ் மீது மோதியது.
இதில் பிரகாஷின் வலது கால் முற்றிலும் சிதைந்தது. உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பிரகாஷ் கடந்த மாதம் 5-ந் தேதி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரகாஷ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×