search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுப்பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் வாக்குமூலம்

    புதுப்பெண்ணை கொலை செய்து அமராவதி ஆற்றில் உடலை வீசி கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தாராபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராமாபுதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி திருமங்கை (33). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதம் ஆகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவடடம் வெள்ளகோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றாங்கரையில் திருமங்கை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    உடலை கைப்பற்றிய போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவர்கள் திருமங்கைக்கு வந்த செல்போன் அழைப்பு குறித்து விசாரித்தனர். அப்போது கொலையாளி குறித்து துப்பு துலங்கியது.

    சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் தனபால் (24) என்பவர் திருமங்கையை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    நான் நாமக்கல் பஸ் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி ஜே.சி.பி. எந்திரம் ஓட்டி வந்தேன். திருமங்கை பஸ் நிலையம் பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார்.

    நான் அவரது கடைக்கு சாப்பிட செல்வேன். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமங்கை அடிக்கடி எனது அறைக்கு வருவார். அப்போது இருவரும் உல்லாசமாக இருப்போம்.

    நான் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் வயதை காரணம் காட்டி அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இந்த நிலையில் திருமங்கை ரமேசை திருமணம் செய்து கொண்டார்.

    அதன் பின்னரும் எங்கள் இருவருக்கும் கள்ளத் தொடர்பு நீடித்தது. மேலும் ஒருவரிடமும் திருமங்கை பேசியது எனக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமங்கைக்கு போன் செய்து எனது அறைக்கு வருமாறு அழைத்தேன். அவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.

    அறையில் இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது மேலும் ஒருவரிடம் பேசுவது குறித்து திருமங்கையிடம் கேட்டேன். இதில் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த நான் திருமங்கை கழுத்தில் ஓங்கி மிதித்தேன். இதில் அவர் மூச்சு திணறி இறந்தார்.

    பின்னர் திருமங்கை இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு நண்பர் ஒருவரை பார்க்க சென்றேன். அவர் ஆம்னி வேன் வைத்து உள்ளார். அவரிடம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஆம்னி வேனை எடுத்து வந்தேன்.

    அதில் திருமங்கை உடலை தூக்கி போட்டேன். அதனை எங்கு வீசுவது என யோசித்தேன். அப்போது திருப்பூர் மாவட்டம் மூலனூர் அமராவதி ஆற்றங்கரை பகுதிக்கு நான் ஏற்கனவே வந்து ஜே.சி.பி. எந்திரம் ஓட்டியது ஞாபகத்திற்கு வந்தது. அதன் படி திருமங்கை உடலை இங்கு கொண்டு வந்து வீசி சென்றேன். 

    இவ்வாறு அவர் போலீ சில் கூறி உள்ளார்.

    இந்த கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×