search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தஞ்சையில் ரெயில் டிக்கெட் புக்கிங் முறைகேடு - வாலிபர் கைது

    தஞ்சையில் ரெயில் டிக்கெட் புக்கிங் செய்யும் இணையதளத்தில் பல்வேறு கணக்குகள் முறைகேடாக உருவாக்கி ரூ.12 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    தஞ்சாவூர்:

    ரெயிலில் செல்வதற்கு டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ஐ.ஆர்.டி.யூ.சி. இணையதளத்தில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். அப்படி கணக்கு வைத்திருக்கும் ஒரு பயனாளர் மாதத்துக்கு 6 டிக்கெட் வரை மட்டுமே புக்கிங் செய்ய வேண்டும். ஆனால் பல இடங்களில் பிரவுசிங் சென்டர், டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கம்யூட்டர் சென்டரில் டிக்கெட் புக்கிங்செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், பல்வேறு போலியான கணக்கு உருவாக்கி டிக்கெட் எடுத்து அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து திருச்சி மண்டல கமி‌ஷனர் மொய்தீன் உத்தரவின்படி, தஞ்சை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் அறிவுரையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாச்சலம், சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர், டிராவல்ஸ் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் தஞ்சை ஞானம் நகரில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டரில் ரெயில் டிக்கெட் புக்கிங் செய்யும் இணையதளத்தில் பல்வேறு கணக்குகள் முறைகேடாக உருவாக்கி ரூ.12 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தஞ்சை ஞானம்நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), என்பவரைபாதுகாப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், செல்போன், கீபோர்டு ஆகியவை கைப்பற்றப் பட்டு அரசுடைமையாக்கப்பட்டது.
    Next Story
    ×