search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    வடசேரி-ஆசாரிப்பள்ளம் பகுதியில் நாளை மின்தடை

    வடசேரி-ஆசாரிப்பள்ளம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் நாகர்கோவில் உபமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம், உபமின் நிலையங்களிலும் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால் பண்ணை, நேசமணிநகர், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    தெங்கம்புதூர் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 14-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் தெங்கம்புதூர் உபமின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மீனாட்சிபுரம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 14-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் மீனாட்சிபுரம் உபமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்க புரம், செட்டிகுளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்துக்கல்லூரி, வேதநகர், அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மற்றும் மின் பாதைகளில் மின்னோட்டம் இருக்காது என கருதி பொதுமக்கள் மின்னூட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும், பராமரிப்பு தினத்தன்று மின் பாதைக்கு இடையூறாக நிற்கும் மரங்களை அகற்றுவதற்கு வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×