search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    மதுரை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

    மதுரை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
    மதுரை:

    மழை சீசன் என்பதால் மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    காய்ச்சல் பரவுவது மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மதுரை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக வைரஸ், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கொசு மருந்து தெளிப்பது, நிலவேம்பு குடிநீர் வழங்குவது, சுத்தம்-சுகாதாரத்தை பேணுவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    மதுரை மாவட்டத்தில் நடப்பு மாதத்தில் மட்டும் 65 பேருக்கு டெங்கு, 7 பேருக்கு சிக்குன்குனியா, 52 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வரைஸ் காய்ச்சல், மலேரியா, டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்தி வருகிறோம். அதேவேளையில் சிக்குன்குனியா மற்றும் மூளைக்காய்ச்சலின் பாதிப்பு உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. இருந்த போதிலும், காய்ச்சலின் பாதிப்புகள் அடுத்த மாதம் முதல் படிப்படியாக குறைந்து விடும் என்றனர்.

    Next Story
    ×