search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணிக்கம்தாகூர்  எம்.பி.
    X
    மாணிக்கம்தாகூர் எம்.பி.

    ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டம் குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி.ஆய்வு

    ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம், கிழவி குளம், நல்லமநாயக்கர் பட்டி, ராமலிங்காபுரம், மேலராஜகுலராமன், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் ஊராட்சிகளில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் திட்டப்பணிகள் குறித்தும் அதற்கான ஊதியம் வழங்கப்படும் விதம் குறித்தும் கேட்டறிந்தார்.

    நூறு நாள் வேலை திட்டத்தில் கிராம மக்கள் அதிகம் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே மத்திய நிதி அதிகம் ஒதுக்கப்படுவதை ஊராட்சி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அவர், திட்டப் பணிகளை அதிகமாக தேர்வு செய்து வேலை வாய்ப்புகளை எற்படுத்தி கொடுப்பது உங்கள் கடமை என வலியுறுத்தினார்.

    மேலும் இந்த திட்டத் தின்படி வேலை ஒதுக்கி கொடுக்கப்படாத பட்சத்தில் அரை சம்பளம் வழங்கப்பட வழிவகை உள்ளது என்றும் அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    சில மாதங்களில் தான் மீண்டும் இந்த பகுதியில் ஆய்வு செய்ய வரும்போது இவையாவும் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாலிங்கராஜா, நகர செயலாளர் சங்கர்கணேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×