search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக் இயந்திரம் மூலம் துளையிட சிர‌ம‌மாக இருந்த பாறை ஒன்று வெளியே எடுக்கப்பட்டது
    X
    ரிக் இயந்திரம் மூலம் துளையிட சிர‌ம‌மாக இருந்த பாறை ஒன்று வெளியே எடுக்கப்பட்டது

    துளையிடுவதற்கு இடையூறாக இருந்த பாறைக்கல் அகற்றம்

    குழந்தை சுர்ஜித் மீட்பு பணிக்காக தோண்டப்படும் குழிக்குள் இடையூராக இருந்த பெரிய பாறை அகற்றப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக உள்ளது.

    சுமார் 76 மணி நேரத்துக்கு மேலாகியும் சிறுவனின் கதி என்ன ஆயிற்றோ? என்ற பதட்டமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. மீட்பு பணிக்கான கிணறு தோண்டும் பணி முடிவடைய இன்னும் சில மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. சுர்ஜித்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகிறது. 
    மீட்பு பணி
    ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இது வரை 55 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர் அஜித்குமார் ஏணி மூலம் உள்ளே இறங்கி சோதனை செய்து விட்டு மேலே வந்தார். மீட்பு பணிக்காக தோண்டப்படும் குழிக்குள் இடையூராக இருந்த பெரிய பாறை கிரேன் உதவியுடன் மேலே கொண்டுவரப்பட்டது.
    Next Story
    ×