search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மண்ணச்சநல்லூர் அருகே மணல் கடத்திய 7 லாரிகள் பறிமுதல் - 14 பேர் கைது

    மண்ணச்சநல்லூர் அருகே மணல் கடத்திய 7 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 14 பேரை கைது செய்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகனூர் பகுதியில் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற 7 லாரிகளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 7 லாரிகளில் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்துபோலீசார் 7 லாரிகளை பறிமுதல் செய்து, லாரி டிரைவர்கள் உள்பட 14 பேரை பிடித்து சிறுகனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி சென்னைக்கு கொண்டு செல்வதும், இந்த கடத்தலில் லாரி டிரைவர்கள் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வினிஷ் (வயது 30) மணியன்குழி பகுதியைச் சேர்ந்த பிரசாத் (29) மற்றும் ஜெகன், மோகன்ராஜ், மதுசூதனன், ராஜ்குமார் (39) குஞ்சுமன்னன், விஜய ராகவன் (43) உள்ளிட்ட 14 பேர் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 14 பேரும் கைது செய்யப்பட்டனர். கடத்தில் பிடிப்பட்ட மணலில் மதிப்பு சுமார் ரூ.7 லட்சமாகும்.

    பரமத்திவேலூர்-கரூர் நெடுஞ்சாலை புகளுரில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் மூட்டைகள் இருந்தது. விசாரணையில் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட புகளுர் பழனிமுத்துநகரைச் சேர்ந்த சரவணன் (வயது 26), என்பவரை கைது செய்து, மணல் கடத்தி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×