search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் மோசடி
    X
    பணம் மோசடி

    தேனி வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூ.1.66 லட்சம் மோசடி

    தேனி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.66 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி கனரா வங்கி முதன்மை மேலாளராக இருப்பவர் இளங்கோ. இவர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 22.2.2018-ந் தேதி தேனி வ.உ.சி. தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பக செல்வி (வயது 49) என்பவர் புதிய வங்கி கணக்கு தொடங்கினார். அன்றைய தினமே அவர் 80 கிராம் எடையுள்ள 8 தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் பெற்றார்.

    இந்நிலையில் கற்பக செல்வி பல வங்கிகளில் போலியான நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றதாக நாளிதழ்களில் செய்தி வந்தது. இதனையடுத்து அந்த நகைகளை ஆய்வு செய்தபோது அவர் அடமானம் வைத்த 8 வளையல்களும் தரம் குறைந்ததாகவும், தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகைகள் என தெரிய வந்தது.

    அவர் வங்கிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 786 பணம் செலுத்த வேண்டும். கற்பக செல்வி கொடுத்த விலாசத்தில் விசாரித்தபோது அவர் அங்கு இல்லை எனவும் அது போலியான முகவரி எனவும் தெரிய வந்தது.

    எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×