search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு- ஒரு கிராம் ரூ.3606

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 28,848 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.

    நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.28 ஆயிரத்து 448 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் 3556 ரூபாயாக குறைந்திருந்தது.

    தங்கம்

    இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலை ஏறுமுகத்தில் சென்றது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.28,848 என்ற அளவில் விற்பனை ஆனது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3606-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது. ஒரு சவரன் 30  ஆயிரத்து 104 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3763 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.48 ஆயிரத்து 200 ஆக இருந்தது. ஒரு கிராம் 48 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது.
    Next Story
    ×