search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

    தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதேபோல் கேரளாவின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. லட்சத்தீவு, கர்நாடகாவில் பல்வேறு இடங்கள், தெலுங்கானா, உள் கர்நாடகம், கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. மயிலாடி, திருத்துறைப்பூண்டி, சேரன்மகாதேவி, பாப்பிரெட்டிப்பட்டி, உடுமலைப்பேட்டை, ராமேஸ்வரம், கரம்பக்குடி ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

    இன்று முதல் அக்டோபர் 4ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் கேரளாவின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×