search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரம்பாக்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    ஆரம்பாக்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.

    கும்மிடிப்பூண்டி அருகே மின்தடையை கண்டித்து கடைகள் அடைப்பு

    கும்மிடிப்பூண்டி அருகே தொடரும் மின் தடையை கண்டித்து இன்று ஆரம்பாக்கம் பகுதியில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள ஆரம்பாக்கம் பகுதியிலும் அதனை சுற்றியுள்ள 4 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களிலும் தினந்தோறும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது.

    இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி ஆரம்பாக்கம் பகுதியில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முழு கடைஅடைப்பு நடைபெற்றது.

    இந்த போராட்டத்தின் போது ஒரு மாதத்துக்குள் சீரான மின் சப்ளை வழங்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    ஆனால் தற்போது மீண்டும் அதே நிலைமை நீடிக்கிறது. தொடர் மின் வெட்டால் வியாபாரிகளும், பொது மக்களும், மருத்துவமனைகளும், அரசு அலுவலர்கள், வங்கிகள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் தொடரும் மின் தடையை கண்டித்தும் ஆரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட கோரியும் இன்று ஆரம்பாக்கம் பகுதியில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    மேலும் பொது மக்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இதனால் ஆரம்பாக்கம் கடை வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×