search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    நாங்குநேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

    ஏற்கனவே, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்த குமார் சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் நாங்குநேரி தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்துள்ளது.

    இடைத்தேர்தலுக்கான அறிவுப்பு வெளியானதும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என விரும்பிய அக்கட்சியின் மூத்த பிரமுகர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    மு.க.ஸ்டாலின் பேட்டி

    அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி தொகுதி  இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.

    மேலும், புதுவையில் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தலை சந்திக்கும் காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    மேற்கண்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்.
    Next Story
    ×