search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கு நடமாட்டம்
    X
    குரங்கு நடமாட்டம்

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குரங்கு சுற்றித்திரிவதால் பக்தர்கள் அச்சம்

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுற்றித்திரியும் குரங்கை வனத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதியில் விடவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை கோவில் வளாகத்திற்குள் குரங்கு ஒன்று நுழைந்தது. பக்தர்களிடம் இருக்கும் பைகளை இழுத்து நோட்டம் பார்ப்பது, குழந்தைகளிடமிருந்து உணவு பொருட்களை பிடுங்குவது, குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை ஆங்காங்கே வீசுவது என கோவில் வளாகத்திற்குள் அட்டூழியம் செய்து வந்தது. கோவில் அலுவலக அறைக்குள்ளும் நுழைய முயற்சித்தது. கோவில் ஊழியர்களோ, பக்தர்களோ குரங்கை விரட்டினால் அவர்களை முறைத்துக்கொண்டு கடிக்க வந்தது.

    வனத்துறையினர் கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்கை பிடித்து காட்டுப் பகுதியில் விடவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×