search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நிலவரம்
    X
    மழை நிலவரம்

    வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது.

    வங்க கடலின் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர எல்லைப் பகுதி மற்றும் தெலுங்கானா வரை நீண்டுள்ளது.

    இந்த சுழற்சியால் 12 மணி நேரத்திற்குள் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மழை

    சென்னையில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு வந்ததால் ஆங்காங்கே லேசான மழைபெய்தது. இரவிலும் சில இடங்களில் மழை பெய்தது.

    இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே இன்றிரவு ஓரளவு பலத்த மழை பெய்யும் என தெரிகிறது.
    Next Story
    ×