search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
    X
    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

    அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள்- அமைச்சர் வழங்கினார்

    திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக தேசிய ஊட்டச்சத்து குழுமம் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகள் சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது, வளர் இளம்பெண்கள், தாய்மார்கள் ஆகியோர் ரத்த சோகையால் பாதிக்கப்படுவது போன்றவற்றை குறைப்பதற்காகவும் மற்றும் தடுப்பதற்காகவும் இத்திட்டத்தினை மத்திய அரசு துவக்கியுள்ளது.

    இத்திட்டம் பொதுவான பயன்பாடு மென்பொருள் (கனிணி தொழில்நுட்ப மென்பொருள்) மூலமாக கண்காணிக்கப்படவுள்ளது. மேலும், போ‌ஷன் அபியான் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி 124, தாராபுரம் 133, குடிமங்கலம் 75, காங்கயம் 89, குண்டடம் 103, மடத்துக்குளம் 77, மூலனூர் 73, பல்லடம் 74, பொங்கலூர் 79, திருப்பூர் (ஊரகம்) 182, திருப்பூர் (நகரம்) 119, உடுமலைப்பேட்டை 143, ஊத்துக்குளி 107 மற்றும் வெள்ளக்கோவில் 104 ஆகிய பகுதிகளைச் சார்ந்த 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைப்பேசிகள் இன்று வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியானக இருக்கும் மேலும், 2 முதல் 5 வயது குழந்தைகள் எவறும் விடுபடாமல் முன்பருவ கல்வி வழங்கவும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் களுக்கான நலக்கல்வியினை வீடியோ காட்சிகள் மூலம் வழங்க இயலும், 0-6 வயதுடைய குழந்தைகள் எவரும் விடுபடாமல் தடுப்பூசி பெற்றுள்ளனரா என்ற விபரத்தினை அறியவும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையும் குறைக்கும் வகையில் கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), திரு.கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் கு.மரகதம், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×