search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்ற ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்த காட்சி.
    X
    நீதிமன்ற ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்த காட்சி.

    இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி- திருவள்ளூர் கோர்ட்டு நடவடிக்கை

    விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை திருவள்ளூர் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் மணிகண்டன் (19).

    இவர் கடந்த 2010-ம் ஆண்டு திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் பைக்கில் சென்றபோது ஈக்காடு அருகே திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகர பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட மோட்டார்வாகன விபத்து வழக்கு நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சத்து 4000 வழங்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார்.

    அதன்பின்னரும் மாநகர போக்குவரத்து நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்காததால், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 101 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 2-ந்தேதி நீதிபதி ராமபார்த்திபன் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்தும் மாநகர போக்குவரத்து நிர்வாகம் மெத்தனமாக இருந்ததால் இன்று திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வந்த மாநகர பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இச்சம்பவத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×