search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையின் பெற்றோர் (குழந்தையின் தொடையில் சிக்கி இருந்த ஊசி)
    X
    குழந்தையின் பெற்றோர் (குழந்தையின் தொடையில் சிக்கி இருந்த ஊசி)

    குழந்தையின் உடலில் ஊசி சிக்கியதற்கு யார் காரணம்? - விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்

    குழந்தையின் உடலில் ஊசி சிக்கியதற்கு யார் காரணம் என்பது குறித்து மருத்துவம், ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குனர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மனைவி மலர்விழி. பிரசவ வலி காரணமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த மாதம் 20-ந்தேதி ஆண்குழந்தை பிறந்தது. மறுநாள் குழந்தைக்கு தொடைப்பகுதியில் தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து தொடைப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த வீக்கம் பெரிதானது.

    இதனால் நேற்று முன்தினம் குழந்தைக்கு ஊசி போட்ட பகுதியை மலர்விழி பார்த்தபோது, ஊசியின் நுனிப்பகுதி தொடை பகுதியில் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 20 நாட்களாக தொடைப்பகுதியில் இருந்த ஊசியின் நுனிப்பகுதியை தானே அகற்றினார்.

    இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர் குழந்தையின் உடலில் ஊசி சிக்கி இருந்ததற்கு யார் காரணம்? என்பது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குனர் தனது விளக்கத்தை 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×