search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை (கோப்புப்படம்)
    X
    முல்லைப்பெரியாறு அணை (கோப்புப்படம்)

    பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில்இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியில் உள்ளது. வினாடிக்கு 1472 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1480 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1058 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2560 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 35.40 அடி. சோத்துப்பறை நீர்மட்டம் 85.11 அடி. வரத்து 10 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 16.6, தேக்கடி 11.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×