என் மலர்

  செய்திகள்

  கொலை
  X
  கொலை

  பந்தலூர் தேவாலாவில் தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டம் பந்தலூர் தேவாலாவில் தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  ஊட்டி:

  நீலகிரி மாவட்டம் பந்தலூர் தேவாலாவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 40) கூலி தொழிலாளி.

  கடந்த, 13-ந் தேதி சாலையோர கால்வாயில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

  விசாரணையில் தேவாலா கோட்டவயல் பகுதியை சேர்ந்த கணேசன் (33) என்பவர் தான் சுந்தர் ராஜை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் கணேசனை கைது செய்தனர்.

  இது குறித்து போலீசார் கூறும்போது,

  கணேசன் மனநோயாளி. பயணிகள் நிழற்குடையில் இரவில் தங்கினார். அப்போது சுந்தர்ராஜ் குடிபோதையில் நிழல் குடையில் படுக்க வந்தார்.

  இதில் ஆத்திரமடைந்த கணேசன் அருகில் கிடந்த கல்லை எடுத்து சுந்தர்ராஜை அடித்துக்கொன்று விட்டார் என்று கூறினர்.
  Next Story
  ×