என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  களக்காடு அருகே ஆட்டோ மோதி மாணவர் படுகாயம்- டிரைவர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மாணவர் படுகாயம் அடைந்தார். டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
  களக்காடு:

  வள்ளியூர் அருகே உள்ள சாலைப்புதூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராபின்ராய் மகன் அபிலாஷ்ராய் (வயது 19). இவர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர் மாதவனுடன் மோட்டார் சைக்கிளில் களக்காடு திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணைக்கு குளிக்க சென்றார். மோட்டார் சைக்கிளை அபிலாஷ்ராய் ஓட்டினார்.

  இந்நிலையில் கொடு முடியாறு அணை சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர் பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அபிலாஷ்ராயை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு  நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஆட்டோ டிரைவரான மகிழடி கீழூரை சேர்ந்த திருமணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×