search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை முயற்சி நடைபெற்ற 3 ஏடிஎம்க்கள்
    X
    கொள்ளை முயற்சி நடைபெற்ற 3 ஏடிஎம்க்கள்

    திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி

    திருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் ஆந்திரா வங்கியுடன் இணைந்து ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இதே போல் திருவள்ளூர்-ஆவடி சாலையில் ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அதன் எதிரே உள்ள பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். எந்திரத்தையும் மர்ம கும்பல் உடைத்து இருந்தனர்.

    ஏ.டி.எம். எந்திரங்களை முழுவதும் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் கொள்ளை கும்பல் திரும்பி சென்று உள்ளது. இதனால் பல லட்சம் பணம் தப்பி உள்ளது.

    கொள்ளை முயற்சி நடந்த 3 ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமிரா உள்ளது. காவலாளிகள் இல்லை. இதனை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்கள.

    3 ஏ.டி.எம். மையங்களிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×