என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  போதை பாக்கு விற்பனை- பெண் உள்பட 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குடோனில் மறைத்துவைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ சீவல் பாக்கு, ஜர்தா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
  திருவொற்றியூர்:

  திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் உள்ள அண்ணா காலனியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, போதை பாக்கு விற்கப்படுவதாக திருவொற்றியூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குடோனில் மறைத்துவைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ சீவல் பாக்கு, ஜர்தா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

  குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மறைத்து வைத்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். ஆர். கே. நகரைச் சேர்ந்த மாரியப்பன் (42), ஆரோக்கிய நாதன் (32), கார்த்திக் (35), வெங்கடேசன் (38), தீபா (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×