என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  தேனி அருகே கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தேனி:

  தேனி அருகே பெரியகுளம் டி.கல்லுபட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது56). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். ராமசாமி மது பழக்கத்திற்கு அடிமையானதால் கூலி வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மன உளைச்சலில் இருந்த ராமசாமி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோம்பை காமராஜர் நகரை சேர்ந்தவர் சரோஜா (70). இவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த சரோஜா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரகீம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

  Next Story
  ×