search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டுச்சந்தை
    X
    மாட்டுச்சந்தை

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் குவிந்த கேரள வியாபாரிகள்

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் இன்று ஏராளமான கேரள வியாபாரிகள் குவிந்தனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இங்குள்ள சந்தையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது உண்டு.

    வருகிற 12-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது இறைச்சியை குர்பானி வழங்குவது இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வாகும். இதற்காக இன்று ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் அதிக அளவு கேரள வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தமிழகத்தில் 70 சதவீதம் ஆடுகள் மட்டுமே பக்ரீத் பண்டிகையில் வெட்டப்படும். 30 சதவீதம் மாடுகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படும். ஆனால் கேரளாவில் முழுக்க முழுக்க மாடுகள் மட்டுமே இறைச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    சாதாரணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்படும் மாடுகள் இன்று ரூ.25 ஆயிரம் முதுல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல காளை மாடு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை விலை போனது. சந்தைக்கு வந்த பெரும்பாலான மாடுகள் விறுவிறுப்பாக விற்றது. இதனால் வழக்கத்தை விட இன்று மாட்டுச்சந்தை முன்கூட்டியே முடிந்தது. விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கன்றுக்குட்டிகள் கூட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

    Next Story
    ×