என் மலர்

  செய்திகள்

  உடைக்கப்பட்ட மாதா சிலை
  X
  உடைக்கப்பட்ட மாதா சிலை

  ஊட்டியில் மாதா சிலை உடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊட்டியில் மாதா சிலையை உடைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

  ஊட்டி:

  நீலகிரி மாவட்டம் எல்ஹில் பகுதியில் சர்ச் உள்ளது. இன்று காலை அங்கு ஊழியர்கள் வந்தபோது மாதா சிலை உடைக்கப்பட்டிருந்தது. இது தவிர அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

  இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர்.

  அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது சர்சுக்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். பின்னர் மாதா சிலை மற்றும் காரையும் அடித்து சேதப்படுத்திய காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் உருவம் தெளிவாக பதிவாகவில்லை.

  இதனால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  மாதா சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×