search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    2-வது கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயிலில் தினமும் 4 லட்சம் பேர் பயணம் செய்யலாம்

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தட திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அதில் 4 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ பயணிகள் சேவை நடந்து வருகிறது. இதில் தற்போது 1 லட்சம் பயணிகள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.

    2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

    இறுதிகட்ட மண் ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தட திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அதில் 4 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பூந்தமல்லி இணைப்பு வழித்தடத்துக்காக விரைவில் மண் ஆய்வு பணி தொடங்கப்படுகிறது.

    போக்குவரத்து நெருக்கடி பகுதிகளான அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, கோவிலம் பாக்கம், பெரும்பாக்கத்தில் மண் பரிசோதனை நடைபெறும்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக 250 இடங்களில் துளை போட்டு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதற்காக விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. 6 மாதங்களில் மண் ஆய்வு பணிகள் முடிவடையும்.

    மண் ஆய்வு பரிசோதனை முடிந்ததும் அடுத்த ஆண்டில் (2020) மெட்ரோ ரெயில் சுரங்க வழித்தட பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். ரெயில் நிலைய கட்டுமான பணிகளும் ஆரம்பிக்கப்படும்.

    வடசென்னை பகுதிகளில் பூமிக்கடியில் கடினமான பாறைகளை குடைந்து சுரங்க வழித்தட பாதைகள் உருவாக்கப்பட உள்ளது. சுரங்கம் தோண்டும் பணிகள் கடுமையான போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×