என் மலர்

  செய்திகள்

  தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளை படத்தில் காணலாம்.
  X
  தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளை படத்தில் காணலாம்.

  திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிப்பு- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளியினின் மோட்டார்சைக்கிளுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவெண்ணைநல்லூர்:

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தொத்தி குடிசை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(வயது 39). கூலித்தொழிலாளி.

  இவர் நேற்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்துபோது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் காணவில்லை.

  இந்தநிலையில் டி.எடையார் பஸ்நிறுத்தம் அருகே சாலைஓரம் மோட்டார்சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிந்த நிலையில் கிடப்பதாக மோகனுக்கு தகவல் கிடைத்தது.

  உடனே மோகன் அங்கு சென்று பார்த்தார். அது தனது மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்தார்.

  யாரோ? மர்மமனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

  இந்தசம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசில் மோகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை கடத்தி தீ வைத்து எரித்தது யார்? முன்விரோதம் காரணமாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×