search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிமுக
    X
    மதிமுக

    நியூட்ரினோ திட்டத்தை கண்டித்து விழிப்புணர்வு பிரசாரம் - மதிமுக கூட்டத்தில் தீர்மானம்

    நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் வைகோ தலைமையில் அடுத்த மாதம் 3 நாட்கள் நடத்தப்படும் என மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    ம.தி.மு.க. உயர்நிலை மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தாயகத்தில் நடந்தது.

    அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * அண்ணாவின் 111-வது பிறந்த நான் விழா மாநாட்டை செப்டம்பர் மாதம் 15-ந் தேதி சென்னையில் சிறப்பாக நடத்துவது வைகோ மீது தேசத்துரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட போது குறைந்தபட்ச தண்டனை கேட்கவில்லை. அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்று நீதிபதியை பார்த்து கேட்டதை இக்கூட்டம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறது.

    * 17 ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்றத்துக்கு செல்லும் வைகோ தொண்டர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பது.

    * நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் ஆகஸ்டு மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய 3 நாட்கள் வைகோ தலைமையில் நடத்துவது என தீர்மானிக்கிறது.

    கூடங்குளம் அணு உலைகளின் வளாகத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு முனைகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ம.தி.மு.க. மற்றும் பூலக நண்பர்கள் இணைந்து ஆகஸ்டு 13-ம் தேதி எழும்பூர் சிராஜ் மகாலில் கருத்தரங்கம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றன.
    Next Story
    ×