search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு
    X
    வீடு

    வாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்

    ‘வீட்டு உரிமையாளர் - வாடகைதாரர்’ வாடகை ஒப்பந்தம் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஓ பன்னீர்செல்வம்

    சொத்து உரிமையாளரும், வாடகைதாரரும் வாடகை தொடர்பாக எந்தவிதமான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து 90 நாட்களுக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. இப்போது ஒப்பந்தத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட காலமான 90 நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி சட்டப்பிரிவுகளை திருத்தம் செய்ய முடிவு செய்து வாடகை ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டிய காலத்தை 120 நாட்களாக நீடிக்க முடிவு செய்தது. இதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×