என் மலர்

  செய்திகள்

  விசாரணை
  X
  விசாரணை

  திருப்பூர் வாலிபர் கொலையில் நண்பர்களிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருப்பூர்:

  தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள சீனிவாசபுரம் சேப்னவாரியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (29). இவர் கடந்த 2 வருடங்களாக திருப்பூர் விஜயாபுரத்தில் தங்கி வீடுகளுக்கு கதவு செய்யும் வேலை பார்த்து வந்தார்.

  கடந்த 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோகுல கண்ணன் தனது நண்பர்களுடன் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கி உள்ளனர்.

  இதில் கோகுல கண்ணன் தலை, வயிறு, உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அறைக்கு சென்று தூங்கி விட்டார். மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் எழுந்து வராததால் சந்கேம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

  அப்போது கோகுல கண்ணன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை கோகுல கண்ணன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை வழக்குபதிவு செய்தனர்.

  கோகுல கண்ணன் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று கோகுல கண்ணனுடன் அவரது நண்பர்கள் சுரேஷ், சக்தி ஆகியோர் இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×