search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி‌ஷ வாயு தாக்கியதில் மயக்கமடைந்த தொழிலாளர்கள்.
    X
    வி‌ஷ வாயு தாக்கியதில் மயக்கமடைந்த தொழிலாளர்கள்.

    திண்டுக்கல் அருகே வி‌ஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் மயக்கம்

    திண்டுக்கல் அருகே வி‌ஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். தனையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சிட்கோ தொழிற்சாலையில் தனபால் என்பவருக்கு சொந்தமான ஆலை உள்ளது. இங்கு கழிவு ஆயில்கள் சேகரித்து மறு சுழற்சி செய்யப்பட்டு பின்னர் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு ஆயில் வாங்கி வரப்படும்.

    நேற்று மாலை ஒரு லாரி கழிவு ஆயில் ஏற்றிக் கொண்டு ஆலைக்கு வந்தது. இந்த ஆலையில் வாட்ச்மேனாக மேற்கு மரியநாதபுரம் திடீர் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 75) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் தொழிலாளியாக உள்ளார்.

    லாரி வந்ததும் அதற்குள் இருந்த தொட்டிக்குள் இறங்கி முருகன் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. உள்ளே இருந்து அவர் சத்தம் போடவே செல்வராஜ் அவரை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினர்.

    இதில் அவர்கள் 2 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உள்ளே இருந்து சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொட்டிக்குள் இருந்த வி‌ஷ வாயு தாக்கியதில் அவர்கள் மயக்கமடைந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×