search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் மின் கோபுரத்தில் பழுது- 50 கிராமங்களில் மின்தடை

    உயர் மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு உயர் மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. 24 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மின்வாரிய ஊழியர்களின் தீவிர நடவடிக்கை காரணமாக பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வழுதூர், உப்பூர், ரெகுநாதபுரம் மின் பாதையில் உள்ள உயர் மின் கோபுரத்தில் நேற்று இரவு திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக பெருங்குளம், தேவி பட்டணம், ரெகுநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின்விநியோகம் பெறும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

    இரவு நேரம் என்பதால் உயர் மின்கோபுரத்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது. மின் தடையால் நேற்று கிராமமக்கள் தூக்கத்தை தொலைத்தனர். முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

    இன்று காலை எந்த உயர் மின் கோபுரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என கண்டறியும் முயற்சியில் 100-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் மின்விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×