
கே.கே. நகர் 5-வது செக்டர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி குமார். இவரது மனைவி லதா. இவர் அதே பகுதியில் லட்சுமணசாமி சாலையில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே வந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் திடீரென லதா அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.