search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிஆர் சரஸ்வதி
    X
    சிஆர் சரஸ்வதி

    அமமுக கொள்கைபரப்பு செயலாளராக சிஆர் சரஸ்வதி நியமனம்

    டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க.வில் நிர்வாகிகள் பொறுப்புகளை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். மேலும் அ.ம.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகிறார்கள்.

    இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க.வில் நிர்வாகிகள் பொறுப்புகளை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி அ.ம.மு.க. பொருளாளர் ரெங்கசாமி துணை பொதுச்செயலாளராகவும், தலைமை நிலைய செயலாளரான முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் துணை பொதுச்செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    மாவட்ட தலைவர் வெற்றிவேலுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×