search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை கிடுகிடு உயர்வு- ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் அதிகரிப்பு
    X

    தங்கம் விலை கிடுகிடு உயர்வு- ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் அதிகரிப்பு

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 688 ஆக உள்ளது.
    சென்னை: 

    தங்கம் தங்கம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 688 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,211-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.



    இதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 காரட்  தங்கம் ஒரு கிராம் ரூ.3,367 ஆகவும், ஒரு சவரன் ரூ.26,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×