search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி பகுதிகளில் ரோஜா செடிகள் விற்பனை அதிகரிப்பு
    X

    போச்சம்பள்ளி பகுதிகளில் ரோஜா செடிகள் விற்பனை அதிகரிப்பு

    போச்சம்பள்ளி பகுதிகளில் சாலையோரங்களில் ரோஜா செடிகள் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு செடியின் விலை ரூ.20-ல் இருந்து ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    போச்சம்பள்ளி:

    தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து மரப்பொருட்கள், இரும்பு பொருட்கள், துணிகள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் மொத்தமாக கொண்டுவந்து சாலையின் ஓரம் போட்டு விற்பனை செய்வது வழக்கம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் தற்போது மழைபெய்து வந்ததால் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள கார்டன்களில் ரோஜா செடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதனால் செடி வியாபாரிகள் கார்டன்களில்சென்று ரோஜா செடிகளை வாங்கி பொதுமக்கள் வந்துசெல்லும் இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வேன்கள் மற்றும் சைக்கிளில்களில் நாட்டு ரோஜா, பெங்களூர் ரோஜா செடிகள், சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ண ரோஜா செடிகள்வைத்து விற்பனை செய்கின்றனர். 

    ஒரு செடியின் விலை ரூ.20-ல் இருந்து ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.  
    Next Story
    ×