என் மலர்

  செய்திகள்

  வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை மாயம்- போலீசார் விசாரணை
  X

  வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை மாயம்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  சிவகிரி:

  வாசுதேவநல்லூர் அம்பேத்கார் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜு (வயது 48). இவர் அங்குள்ள ஒரு சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

  இந்நிலையில் திருமண வீட்டிற்கு செல்வதற்காக ராணி பீரோவில் இருந்த நகைகளை எடுக்க சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

  இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×