search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை மாயம்"

    • நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
    • கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நத்தம்:

    சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.

    அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.

    2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது.
    • மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (55), முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது 39-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.

    நேற்று முன்தினம் மனைவி பரமேஸ்வரி 52 மற்றும் குடும்பத்துடன் கோவையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றார். மாலையில் கோவையில் இருந்து அரசு பஸ்சில் சேலத்திற்கு வந்தனர். அப்போது 3 பைகளை எடுத்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது. அந்த பையில் துணியுடன் 20 பவுன் நகைகளும் இருந்தது. இதையடுத்து மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

    அவர்கள் பஸ் டிரைவர் பூபதியை தொடர்பு கொண்டு பை குறித்து விசாரித்தனர். அவர் பஸ்சை சோதனை செய்து விட்டு பை எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் அந்த பை எங்கு வைத்து மாயமானது என்பது மர்மமாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகை மாயமான பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை
    • நகையை யாராவது பறித்து சென்றார்களா? அல்லது நகையை தவற விட்டாரா? என்பது குறித்தும் விசாரணை

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே அப்பட்டுவிளை சுபாஷ் நகரை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மனைவி மரிய நட்சத்திரம் (வயது 73).

    இவர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜெப கூடத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். ஜெப கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காண வில்லை.

    இதையடுத்து மரிய நட்சத்திரம் நகையை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    நகை மாயமான பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மரிய நட்சத்திரத்திடம் நகையை யாராவது பறித்து சென்றார்களா? அல்லது நகையை தவற விட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • இசிஜி எடுப்பதற்காக தனி அறையில் வைத்து உடைகளை மாற்றியுள்ளனர்.
    • மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை, ஈ.வி.கே. சம்பத் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ்(55) இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெபராணிக்கு நேற்று முன்தினம் உடல் நலகுறைவு ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெபராணியின் சிறுநீர் குழாய் சுருங்கிவிட்டது. உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரது உயிருக்கே ஆபத்தாகி விடும். அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை உடனடியாக கட்டும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ஜெபராணிக்கு இசிஜி எடுப்பதற்காக தனி அறையில் வைத்து உடைகளை மாற்றியுள்ளனர். அவருக்கு சிறுநீரக குழாய் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது அதற்கான பணத்தை கட்டும்படி மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்றும், நகையை வைத்துதான் பணம் கட்ட முடியும் என்று ஜெபராணியின் மகள்கள் கூறியுள்ளனர். அப்போது ஜெபராணியிடம் அவரது மகள்கள் நகையை கேட்டுள்ளனர். அதற்கு அவர் உடையை மாற்றும் போது மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் நகையை கழட்டினர். பின்னர் நான் மயக்கம் அடைந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதில் அதிர்ச்சடைந்த அவரது மகள்கள் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் சென்று முறையிட்டுள்ளனர். இதில் மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்ததால் இதுகுறித்து அவரது மகள்கள் கூடுவாஞ்சேரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • திருமங்கலம் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மாயமானது.
    • கள்ளிக்குடி போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–ன்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென் னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டின் பீரோவில் கடந்த 21.5.2023 அன்று 8 பவுன் தங்க நகையினை பூட்டி வைத்திருந்தார். ஆடி அமாவாசை அன்று எடுக்க முடிவு செய்திருந்தார்.

    இதற்கிடையே அவற்றை சரிபார்ப்பதற்காக கடந்த 3-ந்தேதி சுந்தரம் பீரோவை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இத–னால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தார். ஆனால் யாரும் அதுபற்றி அறிந்தி–ருக்கவில்லை.

    அதே சமயம் சுந்தரத்திற்கு தனது உறவினர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற் கேற்றவாறு அவரது நடவ–டிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதைய–டுத்து அந்த உறவினர் மீது சுந்தரம் கள்ளிக்குடி போலீ–சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–ன்றனர்.

    • ராமநாதபுரத்தில் 15 பவுன் நகை மாயமானது.
    • மகன் மீது தாய் போலீசில் புகார் செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 70). இவர் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நிலை சரியில்லாமல் தனது மகள் பவானி என்பவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீரம்மாள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை காணவில்லை. நகை வைத்து இருந்த பீரோ உடைக்கப் படவில்லை எனவும், தனது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் தனது மகன் மீது சந்தேகம் உள்ளதாகவும் வீரம்மாள் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் பஜார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்
    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்

    வேலூர்:

    திருப்பத்தூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று அலமேலு மங்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

    நேற்று இரவு நிகழ்ச்சி முடித்துக்கொண்டு திருப்பத்தூர் செல்வதற்காக அலமேலு மங்காபுரத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 பெண்கள் இருந்தனர்.

    அந்த ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் சென்றார். கிரீன் சர்க்கிளில் உள்ள ஓட்டல் அருகே 3 பெண்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றனர்.

    பின்னர் பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் ஆட்டோவுக்கு கட்டணம் தருவதற்காக தனது பையை திறந்து பார்த்தார். அப்போது பையில் இருந்த 1½ பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பெண்ணை அங்கு அனுப்பி வைத்தனர்.

    வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார்.
    • போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மனைவி புஷ்பகலை (வயது 52). இவர் ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நகை மற்றும் தாயாரின் நகை, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் என மொத்தம் 90 பவுன் நகைகளை கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை லாக்கரில் வைத்து இருந்தார்.

    கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஆசிரியை 40 பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். மீதம் 50 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்து இருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந்தேதி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆசிரியையை தொடர்பு கொண்டனர். அப்போது உங்களது வங்கி லாக்கர் திறந்த நிலையில் உள்ளது. எனவே வங்கிக்கு வருமாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் நேற்று காலை வங்கிக்கு சென்று தனது லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார்.

    அப்போது அதில் 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் ஆசிரியை கேட்டார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார்
    • அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், அக்.27-

    ஈத்தாமொழி வண்டா விளை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி சிவசாமி. இவரது மனைவி தங்கம் (வயது 61). இவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார். பெருஞ்செல்வ விளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது . இதன் மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தங்கம் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×